திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 28 மே 2019 (14:33 IST)

தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவு – விவசாயிகள் மகிழ்ச்சி

தமிழகத்திற்கு ஜூன் மாதத்திற்கு அளிக்க வேண்டிய தண்ணீரை திறந்துவிட காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இன்று கூடிய காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு உறுப்பினர்கள் பங்கேற்றனர். அதில் ஜூன் மாதத்திற்கு தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய 9.2 டி.எம்.சி அளவு தண்ணீரை திறந்துவிட வாரியத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.