செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 25 செப்டம்பர் 2023 (13:27 IST)

தற்போதைய நிலையில், காவிரியில் நீர் திறப்பது கடினம்: துணை முதல்வர் டிகே சிவக்குமார்

TK Sivakumar
தற்போதைய நிலையில், காவிரியில் நீர் திறப்பது கடினம் என கர்நாடக  துணை முதல்வர் டிகே சிவக்குமார் பேட்டி அளித்துள்ளார்.
 
தற்போதைய நிலையில், காவிரியில் நீர் திறப்பது கடினம் என்றாலும் காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றுவோம் என்றும், அதே நேரத்தில் 
எந்த நிலையாக இருந்தாலும் கர்நாடக மாநிலத்தின் நலனை பாதுகாப்பது எங்கள்  கடமை என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.
 
இந்த நிலையில் காவேரி எங்களுடையது என தேசிய அளவில் ட்விட்டரில் கன்னட அமைப்பினர் ட்ரெண்ட் செய்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிகப்பட்டுள்ளது. குறிப்பாக கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து நீர்திறப்பு 6,338 கனஅடியில் இருந்து 6,605 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran