1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 21 செப்டம்பர் 2023 (10:37 IST)

காவிரி நீர் பங்கீடு விவகாரம்: மத்திய அமைச்சருடன் கர்நாடக முதல்வர் சந்திப்பு

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உடன் கர்நாடக முதல்வர் சித்தராமையா சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மற்றும் அதிகாரிகளும் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
காவிரி விவகாரம் தொடர்பான தங்களது நிலைப்பாட்டை மத்திய அமைச்சரிடம்  கர்நாடக முதல்வர் சித்தராமையா எடுத்துரைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
 
தமிழ்நாட்டிற்கு 5000 கன அடி நீர் தண்ணீர் திறந்து விட உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது
 
காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு நேற்று  இடைக்கால மனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran