1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 31 மார்ச் 2021 (20:22 IST)

பாஜக எம்.எல்.ஏ. தலைமறைவா? ஆபாச வீடியோவில் சிக்கியதால் பரபரப்பு

பாஜக எம்.எல்.ஏ. தலைமறைவா? ஆபாச வீடியோவில் சிக்கியதால் பரபரப்பு
ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கிய பாஜக எம்எல்ஏ ஒருவர் தலைமறைவாகி இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
 
கர்நாடக மாநிலத்தில் பாஜக எம்எல்ஏவாக இருப்பவர் ரமேஷ். இவர் தற்போது தலைமறைவு என அம்மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கிய இவர் தற்போது தலைமறைவு என கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
ஆபாச வீடியோ விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பெண் ஒருவர் நீதிமன்றத்தில் சமீபத்தில் வாக்குமூலம் அளித்தார். இந்த வாக்குமூலம் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கர்நாடகா பாஜக எம்எல்ஏ ரமேஷ் எந்த நேரமும் கைதாகும் சூழல் ஏற்பட்டது. இதனால் அவர் தலைமறைவாகி இருப்பார் என்று கூறப்படுகிறது