1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 4 ஏப்ரல் 2024 (13:14 IST)

இந்த தேர்தல் இன்னொரு சுதந்திர போராட்டம்.. மதுரை எம்பி சு வெங்கடேசனுக்காக கனிமொழி பிரச்சாரம்..!

kanimozhi
மதுரை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சு வெங்கடேசன் அவர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த திமுக எம்பி கனிமொழி இந்த தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல என்றும் இது இன்னொரு சுதந்திர போராட்டம் என்றும் பேசியுள்ளார். 
 
தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் தலைவர்கள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் திமுக எம்பி கனிமொழி இன்று, மதுரையில் பிரச்சாரம் செய்த போது இந்த தேர்தல் இன்னொரு சுதந்திர போராட்டம் என்பதை மக்கள் புரிந்து கொண்டு வாக்களிக்க வேண்டும் என்றும் இதைப் பற்றி நாம் பேசினால் நக்சல் என்பார்கள் என்றும் நம்முடைய வீட்டில் ரெய்டு நடத்துவார்கள் என்றும் தெரிவித்துள்ளார் 
 
அருணாச்சலப்பிரதேசத்தை சீனா ஆக்கிரமித்து பெயர் மாற்றமே செய்து விட்டது ஆனால் இதைப் பற்றி எல்லாம் பிரதமர் மோடி பேசுவதே இல்லை என்றும் அவர் குற்றம் காட்டினார் 
 
மத்திய பாஜக அரசு ஓரவஞ்சனை செய்து வருகிறது என்றும் தமிழ்நாட்டை அவர்கள் மதிப்பதையே இல்லை என்றும் அவர் கூறினார். தமிழ்நாட்டை மதிக்க தெரிந்த ஒரு ஆட்சி மத்தியில் இருக்க வேண்டுமென்றால் இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்றும் அவர் கூறினார்
 
Edited by Mahendran