1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 7 மார்ச் 2024 (15:02 IST)

கனிமொழி தொகுதியில் திமுக மீது அதிருப்தியா? பிரபல நிறுவனம் கொடுத்த ரிப்போர்ட்..!

kanimozhi
வரும் பாராளுமன்ற தேர்தலில் கனிமொழி மீண்டும் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர் சமீபத்தில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை அளித்தார்.

அப்போது அவரிடம் பிரபல நிறுவனம் ஒன்று கொடுத்த ரிப்போர்ட்டை திமுக தலைமை கொடுத்ததாம். தூத்துக்குடி வடக்கு மாவட்ட பகுதியில் திமுக மிகவும் வீக்காக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை என்னவென்று கூடுதல் கவனம் செலுத்துங்கள் என்று திமுக தலைமை அவருக்கு அறிவுறுத்தியதாகவும் தெரிகிறது.

இதனை அடுத்து வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் கீதா ஜீவனை கனிமொழி அழைத்து என்னவென்று விளக்கம் கேட்க அவர் பதில் சொல்ல முடியாமல் திணறி இருக்கிறாராம்.

 இதனை அடுத்து என்ன செய்வீர்களோ, எனக்கு தெரியாது, உடனடியாக அந்த பகுதியில் திமுக ஏன் வீக்காக இருக்கிறது என்பதை அறிந்து சரி செய்ய வேண்டும் என்று அவருக்கு உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Edited by Siva