ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 7 மார்ச் 2024 (13:09 IST)

மதிமுகவுக்கு 1 மக்களவை, 1 மாநிலங்களவை சீட்.? திமுக ஒப்புதல் என தகவல்..!!

மதிமுகவுக்கு ஒரு மக்களவை, ஒரு மாநிலங்களவை சீட் வழங்க திமுக ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் திமுக மதிமுக இடையிலான கூட்டணி பேச்சு வார்த்தை முடிவுக்கு வருகிறது.
 
மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளதால் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீட்டில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. அந்த வகையில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுக, விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.
 
திமுக மதிமுக இடையே நடைபெற்ற மூன்று கட்ட பேச்சுவார்த்தையிலும் சுமுக முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையில் மதிமுகவின் அவசர ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் தனி சின்னத்தில் போட்டியிடுவது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
முதல்வர் ஆலோசனை:
 
காங்கிரஸ், வி.சி.க., மதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு இறுதி செய்வது குறித்து திமுக தொகுதி பங்கிட்டு குழுவினருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.
 
இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் மதிமுகவுக்கு ஒரு தொகுதியும், ஒரு மாநிலங்களை உறுப்பினர் பதவி வழங்கவும் திமுக சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


திமுக மதிமுக உடனான தொகுதி பங்கீடு தொடர்பான அறிவிப்பை விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிகிறது.