யுவன், ஹரிஸ், சாந்தனுவின் இந்தி எதிர்ப்புக்கு பிரபல இயக்குநர் எதிர்ப்பு !
சில தினங்களுக்கு முன் தினம் நான் தமிழ் பேசும் இந்தியன் …ஹிந்தி தெரியாது போடா என்ற டீசர்டை யுவன் சங்கர் ராஜா அணிந்திருக்கும் புகைப்படம் வைரலானது. இந்நிலையில் இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பலதரப்பினரும் கருத்துகள் பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில் நடிகர் அபி சரவணன், இந்தி தெரியாது போடா போன்ற வாசகங்கள் பிரபலமாகி வருவது தவறான முன்னுதாரணம் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், யுவன்சங்கர் ராஜா, நடிகர் ஹரீஸ்,சாந்தனு பாக்யராஜ் போன்றோரின் இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்று இந்திப் படங்களில் வாய்ப்புக் கிடைக்காமலிருக்கும் வரைதான் என இயக்குநர் தங்கர் பச்சான் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆங்கில வழியில் படித்துள்ள யுவன்சங்கர் ராஜா, உள்ளிட்டோர் ஆங்கில வழியில் தமிழுணர்வை வெளிப்படுத்தியுள்ளனர் என தெரிவித்து தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.