திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 27 பிப்ரவரி 2018 (14:08 IST)

துபாயில் என்ன நடந்தது? அமிதாப் பச்சன் ஏன் அந்த டுவிட் போட்டார்?

நடிகை ஸ்ரீதேவியின் மரண செய்தி வெளியாவதற்கு முன்பு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் போட்ட டுவிட் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

 
ஸ்ரீதேவி மாரடைப்பின் காரணமாக மரணமடைந்ததாக முதலில் செய்திகள் வெளியானது. ஆனால், பிரேத பரிசோதனையில் அவரது உடலில் ஆல்கஹால் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, மது போதையில் இருந்த அவர் குளியலறையில் இருந்த தொட்டியில் மயங்கி விழுந்து, நீரில் மூழ்கி மூச்சுத் திணறி இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.  
 
ஸ்ரீதேவியின் மரணத்தில் துபாய் போலீசாருக்கு சில சந்தேகங்கள் இருப்பதால், அதுபற்றி அவரின் கணவர் போனி கபூரிடம் அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். அனைத்து நடைமுறைகளும் முடிந்து ஸ்ரீதேவியின் உடலை மும்பைக்கு கொண்டுவர இன்னும் 2 அல்லது 3 நாட்கள் ஆகும் என துபாயில் உள்ள இந்திய தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.
 
அந்நிலையில், ஸ்ரீதேவியின் மரண செய்தி வெளியாவதற்கு முன்பு அமிதாப் பச்சன் தனது டிவிட்டர் பக்கத்தில் “என்னவென்று தெரியவில்லை. ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போகிறது” என பதிவிட்டிருந்தார். அவர் பதிவிட்டு சில நேரங்களிலேயே ஸ்ரீதேவியின் மரண செய்தி வெளியானது. எனவே, அமிதாப்பச்சனின் ஆறாம் அறிவு ஸ்ரீதேவியின் மரண செய்தியை ஏற்கனவே உணர்ந்துள்ளது என பலரும் டிவிட்டரில் கருத்து தெரிவித்தனர்.
 
இந்நிலையில், துபாயில் இருந்த ஸ்ரீதேவி அவரது கணவர் போனி கபூரின் நண்பர் ஒருவரிடம் வாக்குவாதம் செய்ததாகவும், அப்போது ஏதோ பிரச்சனை ஏற்பட்டதாகவும், இதுபற்றி துபாயில் உள்ள ஒரு நபர் அமிதாப் பச்சனுக்கு தகவல் தெரிவித்ததாகவும் வாட்ஸ் அப்பில் தகவல் பரவி வருகிறது. இது தெரிந்துதான், அமிதாப்பச்சன் அந்த டுவிட்டை போட்டார் எனவும் சிலர் கூறி வருகிறார்கள். 
 
அதேபோல், மும்பையிலிருந்து துபாய் கிளம்பி சென்றதிலிருந்து கடைசி வரை யார் யாரிடமெல்லாம் போனி கபூர் தொலைபேசியில் பேசியுள்ளார் என்ற தகவலையும் துபாய் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர் என செய்தி வெளியாகியுள்ளது.
 
ஸ்ரீதேவியின் மரணத்தில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளது. ஆனால், அவை அனைத்துக்கும் பதில் கிடைக்கும் என்பதா இனிமேல்தான் தெரிய வரும்.