1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (12:05 IST)

கனல் கண்ணன் ஜாமீன் மனு தள்ளிவைப்பு: சென்னை ஐகோர்ட்டு

Kanal Kannan
சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனின் ஜாமீன் மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
 சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள பெரியார் சிலையை அப்புறப்படுத்த வேண்டும் என பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
இதனை அடுத்து எழுந்த புகாரின் அடிப்படையில் கணல் கண்ணன் கைது செய்யப்பட்ட நிலையில் கனல் கண்ணன் ஜாமீன் கேட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நிலையில் அந்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டன
 
இதனையடுத்து சென்னை ஐகோர்ட்டில் கனல்கண்ணன் தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் இந்த மனு தொடர்பாக பதில் அளிக்க காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்
 
இதனை அடுத்து இந்த மனு மீதான விசாரணை செப்டம்பர் 1ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது