ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (18:37 IST)

தமிழக மீனவர்கள் 9 பேர் விடுதலை : இலங்கை நீதிமன்றம் உத்தரவு

fishermen
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேரை விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக மீனவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டனர்
 
இந்த நிலையில் கைதான அனைவரும் இலங்கையிலுள்ள திரிகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மீனவர்களை நிபந்தனையுடன் விடுதலை செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து விடுதலை செய்யப்பட்ட 9 மீனவர்களும் இன்னும் ஓரிரு நாளில் தமிழகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது