வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 7 நவம்பர் 2022 (15:36 IST)

மத்திய அரசை திருத்த நாளாகும்.. முதல்ல உங்கள திருத்துறேன்?! – கமல்ஹாசன்!

இன்று தனது பிறந்தநாளில் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களை சந்தித்த நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

பிரபல நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனின் 68வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களை சந்தித்து நடிகர் கமல்ஹாசன் வாழ்த்துகளை பெற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “பிறந்தநாள் கொண்டாடுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. என் பிறந்தநாளை காரணமாக வைத்து மக்களுக்கு நற்பணி செய்ய மேடை அமைத்து கொடுக்கிறேன். அமெரிக்கா முதல் குக்கிராமங்கள் வரை பல பகுதிகளிலும் தோழர்கள் நற்பணி செய்து வருகிறார்கள்.

இதுவரை 68 இடங்களில் பல பள்ளிகளுக்கு கழிப்பறை கட்டுக் கொடுத்துள்ளோம். நாட்டிற்கு கழிப்பறை, மருத்துவமனை, இடுகாடு எல்லாமே முக்கியம்தான். ஆளுனரையோ, மத்திய அரசையோ திருத்த வேண்டும் என்றால் அதற்கு நாட்களாகும். ஆனால் உங்களை என்னால் திருத்த முடியும்” என அவர் கூறியுள்ளார்.

Edit By Prasanth.K