வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 1 நவம்பர் 2022 (12:08 IST)

விரைவில் தீவிர அரசியலில் ஈடுபடுவேன்: திருப்பதி நடிகை நமீதா பேட்டி!

Namitha
நடிகை நமீதாவுக்கு சமீபத்தில் இரட்டை குழந்தை பிறந்ததால் அவர் தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்தார். இந்த நிலையில் திருப்பதி வந்த நடிகை நமீதா விரைவில் தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்று தெரிவித்துள்ளார்
 
நடிகை நமீதா தனது கணவர் வீரேந்திர செளத்ரியுடன் இன்று திருப்பதி வந்தார். அங்கு அவர் சாமி தரிசனம் செய்த பிறகு அவருக்கு தீர்த்த பிரசாரங்களை தேவஸ்தான அதிகாரிகள் வழங்கினர்
 
இதனை அடுத்து அவர் நிருபர்களிடம் பேசியபோது ’திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ததும் மகிழ்ச்சியாக இருந்தது என்றும் எனது குழந்தைகள் நலமாக உள்ளனர் என்றும் எனது குழந்தைகளுக்காக கடவுளுக்கு நன்றி சொல்லவே வந்தேன் என்றும் தெரிவித்துள்ளார்
 
மேலும் எதிர்காலத்தில் சினிமாவில் நடிக்க விரும்பவில்லை என்றும் ஆனால் அரசியலில் தீவிரமாக ஈடுபட திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தற்போது பாரதிய ஜனதா கட்சியில் இருக்கும் நடிகை நமீதா தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களின் அரசியலில் தீவிர கவனம் செலுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்
 
Edited by Mahendran