வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 22 ஜூலை 2020 (10:14 IST)

அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிராக திமுக வழக்கு! – இன்று விசாரணை!

உள்ளாட்சி பணிகளுக்கான டெண்டர்களில் மோசடி செய்ததாக அமைச்சர் வேலுமணி மீது திமுக தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

உள்ளாட்சி பணிகளுக்காக விடப்பட்ட டெண்டர்களில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மோசடி செய்ததாக குற்றம் சாட்டிய அறப்போர் இயக்கம் மற்றும் திமுக ஆகியவை இந்த முறைகேடு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

மேலும் இந்த வழக்கை நீதிபதி சத்யநாராயணன் தலைமையிலான அமர்வு விசாரிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்த நிலையில் அது நிராகரிக்கப்பட்டு, நீதிபதி சுந்தரேஷ் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும் என கூறப்பட்டுள்ளது. இன்று நடைபெற இருக்கும் இந்த விசாரணையில் புலனாய்வு குழு அமைப்பதா வேண்டாமா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.