புதன், 12 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By bala
Last Updated : புதன், 9 நவம்பர் 2016 (12:03 IST)

சல்யூட் மிஸ்டர் மோடி: கமல்ஹாசன் பாராட்டு

500, 1000 ரூபாய் நோட்டுகள் இன்று முதல் வாபஸ் வாங்கப்படுகிறது. நேற்று இரவு இந்திய பிரதமர் மோடி இந்திய அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இன்று முதல் இந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லுபடி ஆகாது. அதற்கு பதிலாக புதிய வடிவிலான 500, 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்படுகிறது. மோடியின் இந்த அறிவிப்பை பலர் பாராட்டி வருகின்றனர். கருப்பு பணத்தை வெளிக்கொண்டிவர  நல்ல முடிவு என பாராட்டி வருகின்றனர்.

 

 

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியபோது, சல்யூட் மிஸ்டர் மோடி என்றும் அரசியல் கட்சிகள் மோடியின் இந்த அறிவிப்பை பாரட்ட வேண்டும் குறிப்பாக முறையாக வரி கட்டுவோர்கள் என்று கூறியுள்ளார்.