1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Actor kamal register party in Election commission

கட்சி பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் கமல்ஹாசன்....

Kamalhaasan
நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் கட்சியின் பெயரை பதிவு செய்ய தேர்தல் ஆணையத்திடம் நேரம் கேட்டுள்ளார்.

 
நடிகர் கமல்ஹாசன் வருகிற 21ம் தேதி மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் வீட்டிலிருந்து தனது அரசியல் பயணத்தை துவங்குவதாக ஏற்கனவே அறிவித்துள்ளார்.  
 
அதைத் தொடர்ந்து அன்று மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தனது அரசியல் கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை அவர் அறிமுகம் செய்ய உள்ளார்.
 
இந்நிலையில், தனது அரசியல் கட்சியின் பெயரை பதிவு செய்வதற்காக தேர்தல் ஆணையத்திடம் அவர் நேரம் கேட்டுள்ளார். அநேகமாக, வருகிற 15ம் தேதி அவர் தேர்தல் ஆணையத்தில் தனது அரசியல் கட்சியின் பெயரை பதிவு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
மகா சிவராத்திரி முன்னிட்டு பங்குசந்தைக்கு இன்று விடுமுறை