புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 21 பிப்ரவரி 2018 (12:08 IST)

கருணாநிதியை சந்தித்த 74 வயது திமுக தொண்டர் : வைரல் வீடியோ

ஈரோட்டைச் சேர்ந்த திமுக பெண் தொண்டர் ஒருவர் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் மற்றும் தலைவர் கருணாநிதியை சந்தித்த நெகிழ்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 
திமுகவிற்கு பல கோடி தொண்டர்கள் உள்ளனர். அந்நிலையில், தற்போது உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் கருணாநிதியை சந்திப்பதற்காக, ஈரோட்டை சேர்ந்த பாப்பாத்தி என்ற 74 வயது பெண் தொண்டர் பலமுறை முயன்றார். ஆனால், வாய்ப்பு கிடைக்கவில்லை. 
 
இந்த விவகாரம் ஸ்டாலினுக்கு தெரிய வர உடனே அவரை சென்னைக்கு வரவழைத்து, தேநீர் விருந்து கொடுத்து உபசரித்து, கருணாநிதியையும் சந்திக்க ஏற்பாடு செய்துள்ளார்.
 
ஸ்டாலின் மற்றும் கருணாநிதியின் கரங்களை பிடித்துக்கொண்டு அவர் உருகும் நெகிழ்ச்சியான காட்சிகள் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.
 
இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோவை சமூக வலைத்தளங்களில் திமுகவினர் பகிர்ந்து வருகின்றனர்.