தொடர்புடைய செய்திகள்
- கமல்ஹாசன் மரபணு மாற்றப்பட்ட விதை - ஜெயக்குமார் பேட்டி
- பள்ளிக்கு செல்வதை தடுக்கலாம் ; நான் பாடம் கற்பதை தடுக்க முடியாது - கமல்ஹாசன் ஆவேசம்
- அரசியல் பயணத்தை தொடங்கிய கமல்ஹாசனுக்கு சினிமா பிரபலங்கள் வாழ்த்து
- கமல்ஹாசன் காணாமல் போவார் என்றால் ஏன் எதிர்க்க வேண்டும்?
- கலாம் படித்த பள்ளியை வெளியே நின்று பார்வையிட்ட கமல்ஹாசன்
அடுத்த சூப்பர்ஸ்டார் வந்து விட்டார்: கமல் பற்றி அஸ்வின் கருத்து
இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் நடிகர் கமல்ஹாசன் அரசியல் பயணம் குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் அரசியலுக்கு வருவதாய் அறிவித்துள்ளனர். அதுவும், தனது அரசியல் கட்சியின் பெயர் மற்றும் கொள்கைகளை இன்று கமல்ஹாசன், மதுரையில் நடைபெறும் பிரம்மாண்ட மாநாட்டில் அறிவிக்கவுள்ளார்.
அப்துல்கலாம் வீட்டிலிருந்து நடிகர் கமல்ஹாசன் இன்று தனது அரசியல் பிரவேசத்தை துவங்கியிருக்கிறார். இன்று மாலை மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில், தன் கட்சியின் பெயரையும், கொடியையும் கமல் அறிவிக்கவுள்ளார்.
இதுகுறித்து, இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், தமிழகத்தில் இருந்து மற்றொரு சூப்பர் ஸ்டார் தனது அரசியல் பயணத்தை இன்று மாலை துவங்குகிறார். அரசியல் களம் மாபெரும் மாற்றத்துக்கு தயாராகிவிட்டதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
