நம்பிக்கைகளுக்கு விதை போடும் நன்னாள்: கமல்ஹாசனின் புத்தாண்டு டுவிட்

kamal
நம்பிக்கைகளுக்கு விதை போடும் நன்னாள்: கமல்ஹாசனின் புத்தாண்டு டுவிட்
siva| Last Updated: புதன், 14 ஏப்ரல் 2021 (07:53 IST)
இன்று தமிழகம் முழுவதும் மட்டுமின்றி உலகில் உள்ள தமிழர்களும் மிக சிறப்பாக தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது என்பது தெரிந்ததே. இன்று காலை முதலே தமிழர்கள் கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் இன்று தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது என்பதும் பக்தர்கள் கோவிட் நெறி முறைகளை பயன்படுத்தி தரிசனம் செய்து வருகிறார்கள் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன

இந்த நிலையில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை பிரதமர் மோடி உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் நம்பிக்கைகளுக்கு விதை போடும் இந்நாள் நன்னாள் என டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த டுவிட்டில் அவர் கூறியிருப்பதாவது:
தேர்தல் முடிந்து நம் எதிர்காலத்திற்காகக் காத்திருக்கும் தருணத்தில், ஒன்றாய்க் கூடவும் எண்ணங்களைப் பகிரவும் வாய்ப்பளிக்கும் ஒரு தருணம் இந்தத் தமிழ்ப் புத்தாண்டு. நம் நம்பிக்கைகளுக்கு விதை போடும் இந்நன்னாளில் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
இதில் மேலும் படிக்கவும் :