திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 26 மார்ச் 2021 (11:45 IST)

திமுகவை வீழ்த்த என் உயிரையும் கொடுப்பேன்! – எடப்பாடியார் அதிரடி பிரச்சாரம்!

தமிழக சட்டமன்ற தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திமுவை வீழ்த்த தந்து உயிரையும் கொடுப்பேன் என பேசியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அதிமுக தேர்தலை சந்திக்கிறது. இதற்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்துவிட்ட நிலையில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் இன்று திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை, சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்கிறார். இந்நிலையில் பிரச்சாரத்தில் பேசிய அவர் “நான் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பல இடங்களில் பிரச்சாரம் செய்து வருகிறேன். பல இடங்களில் தொடர்ந்து பேசி வருவதால் எனது தொண்டை வலி எடுக்கிறது. ஆனாலும் தொடர்ந்து பேசி வருகிறேன். திமுகவை வீழ்த்த என் தொண்டை மட்டுமல்ல உயிரே போனாலும் கவலைப்பட மாட்டேன்” என பேசியுள்ளார்.