திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (11:43 IST)

முக்கியக் கட்சிகள் அழைத்தன… ஆனால் இன்னும் முடிவு செய்யவில்லை – தேர்தல் குறித்து கமல்

நாடாளுமன்றத் தேர்தலில் யாரோடுக் கூட்டணி என்பது குறிப்பிட்டு நேற்று பொள்ளாச்சியில் பதிலளித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 100 நாட்களே உள்ள நிலையில் தமிழகத்தில் திமுக தலைமையிலான மெகாக் கூட்டணி அமைந்துள்ளது. இந்த கூட்டணியில் திமுக, காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விசிக, மமக, முஸ்லிம் லீக் கட்சிகள் இணையவுள்ளது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.எதிர்ப்புறமான அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக மற்றும் தேமுதிக ஆகியக் கட்சிகள் இணைந்து கூட்டணி அமைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஆனால் புதிதாக கட்சி ஆரம்பித்து விறுவிறுப்பாக மக்கள் பணியில் ஈடுபட்டு வரும் கமலும் மக்களவைத் தேர்தலில் தங்கள் கட்சி போட்டியிடும் என அறிவித்துள்ளார். ஆனால் கூட்டணி குறித்து இன்னும் அறிவிக்கவில்லை. காங்கிரஸோடுக் கூட்டணி அமைக்கலாம் என முடிவு செய்திருந்த நிலையில் காங்கிரஸ் திமுக கூட்டணியில் இணைந்தது கமலுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. அதனால் இப்போது எந்த கூட்டணியில் இணைவது என்றக் குழப்பத்தில் உள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில் இந்தியன் 2 படப்பிடிப்பு இடைவேளையில் மக்கள் பணிகளில் ஈடுபட்டு வரும் கமல் நேற்று பொள்ளாச்சியில் நடைபெற்றக் கூட்டத்தில் கலந்து கொளவதற்காக வந்திருந்தார். அப்போது அவர் ஊடகங்களிடம் பேசிய கமல் ’மக்களவைத் தேர்தல் குறித்துக் கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசித்து முடிவு எடுத்துள்ளோம். அதுகுறித்து இப்போது பேச முடியாது. அதற்கான அவசரமும் இப்போது இல்லை. முக்கியக் கட்சிகளிடம் இருந்து பேச்சுவார்த்தைக்கான அழைப்பு வந்துள்ளது. ஆனால் இன்னும் எதுவும் முடிவாகவில்லை. தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவோம்’ எனக் கூறியுள்ளார்.