1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 3 ஆகஸ்ட் 2018 (21:49 IST)

மீண்டும் கருணாநிதியை சந்திக்க சென்ற கமல்!

திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆறு நாட்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருடைய உடல்நலத்தை கிட்டத்தட்ட இந்தியாவில் உள்ள முக்கிய தலைவர்கள் அனைவரும் நேரிலும், தொலைபேசியிலும் கேட்டறிந்து அவர் விரைவில் நலம் பெற வாழ்த்தினர்.
அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி சினிமா நடிகர்கள் பலரும் நேரில் சென்று கருணாநிதியின் உடல் நலத்தை பற்றி விசாரித்து வந்தனர். இன்று கர்நாடக முன்னாள் முதல்வர் தேவகவுடா கருணாநிதியின் உடல் நலத்தை விசாரிக்க சென்னை வந்திருந்தார். 
 
இந்நிலையில், கமல்ஹாசன் மாலை காவேரி மருத்துவமனைக்கு வந்து திமுக தலைவர் கருணாநிதி நலம் குறித்து விசாரித்தார். கமல்ஹாசன், கோபாலபுரம் இல்லத்திற்கே நேரில் சென்று கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்திருந்தார். 
 
இருப்பினும், இன்று 2 வது முறையாக கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்க வந்தார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை சந்தித்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.