புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 12 டிசம்பர் 2023 (17:32 IST)

இதுவரை இல்லாத எதிர்ப்பு எதிரொலி: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுகிறாரா கமல்?

பிக் பாஸ் நிகழ்ச்சியை கடந்த ஆறு சீசன்களாக தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் ஏழாவது சீசனையும் தொகுத்து வழங்கிய நிலையில் இந்த சீசனில் அவரது பெயருக்கு மிகப்பெரிய கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக பிரதீப் ஆண்டனியை பிக் பாஸ் வீட்டை விட்டு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டது மிகப்பெரிய சர்ச்சைக்கு உள்ளானது. தனது தரப்பு நியாயத்தை கூறுவதற்கு பிரதீப் ஆண்டனிக்கு அவர் வாய்ப்பை அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும் மாயா, பூர்ணிமா ஆகியோர் அளித்த பொய்யான குற்றச்சாட்டுகளை அவர் ஏற்றுக் கொண்டதையும் பார்வையாளர்கள் விமர்சனம் செய்தனர்

அதேபோல் வினுஷா குறித்து நிக்சன் கூறியதை கமல் கண்டுகொள்ளவே இல்லை என்றும் விமர்சனம் செய்யப்பட்டது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை அவ்வப்போது தனது அரசியல் கட்சியின் மேடையாகவும் பயன்படுத்தி வந்த கமலுக்கு இந்த சீசன் மிகப்பெரிய சோதனையாக அமைந்துள்ளது.

எனவே இந்த சீசனுடன் கமல் பிக் பாஸ் நிகழ்ச்சியை முடித்துக் கொள்ள போவதாகவும் அடுத்த சீசனில் அவர் தொகுத்து வழங்கப் போவதில்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் கமல் தரப்பிடம் இருந்து இது குறித்து எந்த விதமான அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது


Edited by Mahendran