வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 23 மார்ச் 2022 (21:15 IST)

விருதுநகர் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை: கமல்ஹாசன் டுவிட்

விருதுநகரைச் சேர்ந்த 22 வயது இளம் பெண்ணை 8 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழ் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது
 
இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் உலக நாயகன் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
விருதுநகர் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை, நினைக்கவும் பயங்கரம். குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை உறுதிப்படுத்தப்பட வேண்டும். அத்தோடு, தனக்கு இழைக்கப்பட்டது தீங்குதான், அவமானமல்ல என்று பெண்கள் புரிந்துகொள்ளத் தேவையானதைச் செய்வதும் அவசியம்.