1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. ADMK Madhusudhanan health in worst condition

மதுசூதனன் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம் - மருத்துவமனை நிர்வாகம்

மதுசூதனன்
அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

 
அதிமுக அவை தலைவர் மதுசூதனன் உடல்நல குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் அதிமுக மாவட்ட செயலாளர்கள் வெங்கடேஷ் பாபு, பாலகங்கா, ராஜேஷ் உள்ளிட்டோர் அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர்.
 
உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள மதுசூதனன் கடந்த மாதம் 20 ஆம் தேதி முதல் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
அடுத்த கட்டுரையில்
பஞ்சாப் முதல்வரின் ஆலோசகர் பதவியில் இருந்து விலகினார் பிரசாந்த் கிஷோர்