செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (19:38 IST)

கூட்டணியா? தனித்து போட்டியா? கமல்ஹாசன் அறிவிப்பு!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருப்பதை அடுத்து அதிமுக திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி முதன்முதலாக சட்டமன்ற தேர்தலை சந்திக்க இருக்கும் நிலையில் அந்த கட்சி தனித்துப் போட்டியா? அல்லது திமுக அல்லது அதிமுக உடன் ஏதாவது ஒரு கூட்டணியில் இணையுமா? அல்லது மூன்றாவது அணி அமைக்குமா? என்ற கேள்வி எழுந்தது 
 
இந்த நிலையில் இன்று சென்னையில் கமல்ஹாசன் பேட்டி அளித்த போது சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைத்து போட்டியிடுமா? அல்லது தனித்து போட்டியிடுமா என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் 
 
தேர்தலுக்கு இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இருப்பதால் கூட்டணி குறித்து அவர் விரைந்து முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது