1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 12 ஜூலை 2024 (07:46 IST)

’இந்தியன் 2’ படத்திற்கு குவியும் நெகட்டிவ் கமெண்ட்ஸ்.. கமல் ரசிகர்கள் அதிர்ச்சி..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ’இந்தியன் 2’ திரைப்படம் இன்று வெளியாகி இருக்கும் நிலையில் படத்தை பார்த்த பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் நெகட்டிவ் கமெண்ட்ஸ்களை கொடுத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பெரும் எதிர்பார்ப்புடன் பெரும் பொருட்செலவில் உருவாகி இருந்த இந்தியன் 2 திரைப்படம் வெளிநாடுகளில் நேற்று நள்ளிரவே வெளியாகி உள்ள நிலையில் பெங்களூர் உள்பட வெளிமாநிலங்களில் இன்று காலை 6 மணிக்கு காட்சி தொடங்கியுள்ளது 
 
இந்த நிலையில் வெளிநாடுகளில் படம் பார்த்தவர்கள் இந்த படம் மிகவும் மோசமாக இருக்கிறது என்று ஷங்கர் ட்ரெண்டில் இல்லை , அவுட்டேட்டில் இருக்கிறார் என்றும் ஒரு காட்சியில் கூட புதுமை இல்லை என்றும் விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர். 
 
முன்னணி திரைவிமர்சகர் ஒருவர் இந்த படத்திற்கு 5க்கு 1.75 மதிப்பெண் கொடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பல தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருக்கும் பலர் தங்களுடைய சமூகவலைதளங்களில் இது போன்ற ஒரு மோசமான படம் பார்த்ததில்லை என்று நெகட்டிவ் கமெண்ட்ஸ்களை கொடுத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஆனால் சிலர் வேண்டும் என்ற நெகட்டிவ் கமெண்ட்ஸ் கொடுக்கலாம் என்றும் நடுநிலை பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களின் விமர்சனம் வந்த பிறகுதான் இந்த படத்தின் உண்மையான விமர்சனம் தெரிய வரும் என்றும் கூறப்படுகிறது. 
 
Edited by Siva