1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 11 ஜூலை 2024 (14:14 IST)

இந்தியன் 2' படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி.. ஆனால் ஒரே ஒரு நாள் மட்டும் தான்: தமிழக அரசு..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் நாளை ஒரு நாள் மற்றும் இந்த படத்திற்கு 5 காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 
 
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் அனிருத் இசையில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. 
 
இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக நான்கு காட்சிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கும் நிலையில் லைகா நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று நாளை ஒருநாள் மற்றும் ஐந்து காட்சிகள் திரையிட்டு கொள்ளலாம் என்று தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 
 
எனவே நாளை காலை 9 மணி முதல் இரவு 2 மணிக்குள் 5 காட்சிகளை திரையிட்டு கொள்ளலாம் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை அடுத்து சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நாளை இந்தியன் 2 திரைப்படத்தின் முதல் காட்சி 9 மணிக்கு தொடங்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
ஆனால் அதே நேரத்தில் அண்டை மாநிலங்களில் அதிகாலை காட்சிகள் திரையிடப்படுவதால் காலை ஏழு மணி முதல் திரைவிமர்சனம் வெளியாகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
Edited by Mahendran