ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 12 ஜூலை 2024 (07:40 IST)

ரஹ்மான் ரசிகர்களுக்கு இந்தியன் 2 படத்தில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. ஷங்கர் கொடுத்த அப்டேட்!

கமல்ஹாசன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’இந்தியன் 2’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் வரும் ஜூலை மாதம் 12ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் கமல்ஹாசனை விட அதிக நேரம் வரும் விதமாக சித்தார்த்தின் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த பாகத்தின் இரண்டாம் பாதியில் தான் இந்தியன் தாத்தா வருவாராம். அதனால் படக்குழுவுடன் இணைந்து சித்தார்த்தும் பல இடங்களில் நேர்காணல் கொடுத்து படத்துக்கு ப்ரமோஷன் செய்து வருகிறார். ஆனால் கமல் கொஞ்ச நேரமே வருவார் என்பது அவரது ரசிகர்களுக்கு ஒரு சிறு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியன் முதல் பாகத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். ஆனால் இரண்டாம் பாகத்துக்கு அனிருத் இசையில் உருவாகியுள்ள பாடல்கள் ரஹ்மான் ரசிகர்களை பெரியளவில் கவரவில்லை. இருவரின் இசை சம்மந்தமான ஒப்பீடுகள் சமூகவலைதளங்களில் நடந்தவண்ணம் இருந்தன. இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் சேனாபதியின் தீம் இசையாக ரஹ்மான் அளித்த இசைக்கோர்வை இரண்டாம் பாகத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக இயக்குனர் ஷங்கர் தெரிவித்துள்ளார். இதற்காக ஏ ஆர் ரஹ்மான் மற்றும் அனிருத் ஆகிய இருவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.