1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 2 பிப்ரவரி 2022 (11:31 IST)

நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கமல்ஹாசன் பாராட்டு!

நீட் தேர்வுக்கு ஒரு பக்கம் அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த போதிலும் மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் நீட் தேர்வுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். அதனால்தான் நீட் தேர்வில் தமிழ் மாணவ மாணவிகள் அதிகமானோர் தேர்ச்சி பெற்று இந்த ஆண்டு அதிக அளவில் மருத்துவ படிப்பில் சேர உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தநிலையில் நீட் தேர்வில் வெற்றிபெற்ற ஜலகண்டாபுரம் அரசு மேல்நிலை மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியபோது நீட் ஒரு அநீதியான தேர்வு என்பதை அதன் விளைவுகளே நிரூபிக்கின்றன என்றும் இந்தியா முழுமைக்கும் இரத்து செய்யப்படும் வரை எதிர்க்க வேண்டிய ஒன்று என்பதில் ஐயம் இல்லை என்றும் அதற்காக நாம் கண்மணிகளின் சாதனையை பாராட்டாமல் இருக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார் 
 
சேலம் அருகே ஜலகண்டாபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் 10 மாணவிக்கு எம்பிபிஎஸ் சீட் கிடைத்தை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன் என்ற சிறிய கிராமத்தில் இருந்து மிக கடுமையான இந்த தேர்வை எதிர்கொண்டு எவருக்கும் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்து இருக்கிறார்கள் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்