கமல்ஹாசனின் சொத்து மதிப்பு ரூ.300 கோடி, கடன் ரூ.50 கோடி.. ராஜ்ய சபா வேட்புமனுவில் தகவல்..!
உலகநாயகன் கமல்ஹாசன், நேற்று திமுக சார்பில் ராஜ்யசபா எம்பியாக மனு தாக்கல் செய்த நிலையில், அதில் அவருடைய சொத்து மதிப்பு குறிப்பிடப்பட்டுள்ளது.
கமல்ஹாசனுக்கு 2023–24 ஆம் நிதியாண்டில், சுமார் 79 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாகவும், அவருடைய அசையும் சொத்துகளின் மதிப்பு சுமார் 60 கோடி என்றும், ஒட்டுமொத்த அசையா சொத்துகளின் மதிப்பு சுமார் 245 கோடி என்றும் கூறப்பட்டுள்ளது.
மொத்தத்தில், அவரிடம் சுமார் 300 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 4 கார்கள் மதிப்பு 8 கோடி என்றும், கையில் 2 லட்சம் ரூபாய் ரொக்கம் வைத்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்களிலிருந்து அவர் பெற்ற மொத்த கடன் தொகை சுமார் 50 கோடி ரூபாய் என்றும், ராஜ்யசபாவிற்கு சமர்ப்பிக்கப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Edited by Mahendran