செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 24 ஏப்ரல் 2018 (17:46 IST)

உள்ளாட்சி தேர்தலில் களமிறங்க கமல்ஹாசன் முடிவு

இன்று ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் நடந்த கூட்டத்தில், வரும் உள்ளாட்சி தேர்தலில் களமிறங்க உள்ளதாக கமல்ஹாசன் கூறியுள்ளார்.

 
பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மாதிரி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியதாவது:-
 
கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை அரசு புரிந்து கொள்ள வேண்டும். ஆண்டுக்கு மூன்று நாட்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்பது விதிமுறை. 
 
மக்களுக்கான சிம்மாசனம் உருவாகிக் கொண்டிருக்கிறது. புதிய தமிழகத்தை உருவக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. மக்கள் நீதி மய்யம் மேட்டுக்குடி மக்களுக்கானது அல்ல. உள்ளாட்சி தேர்தலில் களமிறங்க உள்ளோம் என்று கூறினார்.