செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : புதன், 24 ஜூன் 2020 (23:32 IST)

ஓடும் நதி நீர்…என் அடுத்த வரியின் அழியா உயிர் நீர்… கமல்ஹாசன் கவிதை

கவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம் என்பதால் பல்வேறு சினிமா பிரபலங்களும், பாடலாசிரியர்களும், கவிஞர்களும்,  ரசிகர்களும் கவிஞரின் பிறந்த தினத்தை சிறப்பாய் கொண்டாடினர்.

இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தில் தலைவரும்,  பன்முக ஆற்றல் கொண்டவருமான  நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் கவிஞர் கண்ணதாசன் பிறந்த தினத்தில் ஒரு கவிதை எழுதியுள்ளார்.
அதில்,

’’அய்யன் கண்ணதாசருக்கு
என்
ஆழ்ந்த அன்பின்
ஒரு துளி.
இன்று
உமக்குப் பிறந்த நாளாம்.
நேற்றும், இன்றும், நாளையும் அதுவாகவே கடவது
இத்தகை வித்தகர்
அடிக்கடி கிட்டார்!
கிட்டா அடிகளை
கடைமடை சேர்க்கும்
இவ்வற்புத நதிக்கு
ஏது பிறந்த நாள்?
இன்றும், என்றும்
ஓடும்
நதி நீர்.
என் அடுத்த வரியின்
அழியா
உயிர் நீர்.’’

என்று பதிவிட்டுள்ளார். இக்கவிதை வைரல் ஆகி வருகிறது.