செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 7 நவம்பர் 2019 (09:31 IST)

தந்தைக்கு ஏன் சிலை ? – கமல் விளக்கம் !

தனது தந்தைக்கு சிலை வைப்பது ஏன் என்பது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகரும் அரசியல்வாதியுமான கமலின் 65 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த நாளன்றுதான் அவரது தந்தையின் நினைவு நாளும் வருகிறது. இதையடுத்து  கமல் தனது தந்தை சீனிவாசன் அவர்களுக்கு பரமக்குடியில் சிலை அமைக்க முடிவெடுத்துள்ளார்.

இதற்காக கமல்ஹாசன் சென்னையிலிருந்து விமானம் மூலம் நேற்று மாலை மதுரை புறப்பட்டுச் சென்றார்.அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் ’ எனது தந்தை உயிருடன் இருந்த போது சிலை வைக்க வேண்டுமென விரும்பவில்லை. நாங்கள் செய்யும் பணியைதான் விரும்பினார். அவருடைய ரசிகன், மாணவன் என்ற முறையில் சிலை வைக்க விரும்பினேன். எனது கட்சியினருமே அதையேதான் விரும்பினார். ’ எனத் தெரிவித்தார்.

மேலும் உள்ளாட்சித் தேர்தலுக்கு தங்கள் கட்சியினர் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.