செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 15 மே 2023 (13:15 IST)

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தற்கொலை தான்.. குற்றப்பத்திரிகையில் தகவல்..!

kaniyamur
கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்த மாணவி ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில் அவரது மரணம் தற்கொலை தான் என குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
கள்ளக்குறிச்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி ஒருவர் திடீரென மர்மமான முறையில் மரணமடைந்தார். இதனை அடுத்து அந்த பகுதி மக்கள் பள்ளியை சூறையாடினர் என்பதும் இதனால் பள்ளி சில மாதங்களுக்கு மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில் கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரணம் மற்றும் கலவர வழக்கில் போலீஸ் சிபிசிஐடி போலீஸ் சார் 1200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர் 
 
இந்த குற்றப்பத்திரிகையில் மாணவி கொலை செய்யப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் தற்கொலைக்கான முகாந்திரம் உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
Edited by Siva