திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 20 ஜனவரி 2023 (15:49 IST)

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் செல்போனை பெற மறுத்த விழுப்புரம் நீதிமன்றம்.. என்ன காரணம்?

srimathi mother
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி ஒன்றில் படித்துக் கொண்டிருந்த ஸ்ரீமதி என்ற மாணவி மர்மமான முறையில் மரணமடைந்ததை எடுத்து அவருடைய செல்போனை ஒப்படைக்கும் படி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது
 
இந்த நிலையில் மாணவி ஸ்ரீமதியின் தாயார் அவருடைய செல்போனை விழுப்புரம் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வந்த போது அந்த செல்போனை வாங்க மறுத்த நீதிமன்ற அதிகாரிகள் அந்த செல்போனை சிபிசிஐடி விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தினர்.
 
 இதனை அடுத்து ஸ்ரீமதியின் தாயார் அந்த செல்போனை சிபிசிஐடி விசாரணை அலுவலகம் ஒப்படைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த செல்போனில் என்னென்ன இருக்கும் என்பது குறித்து இனிமேல் தான் ஆய்வு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran