வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 12 ஜனவரி 2023 (22:21 IST)

உக்ரைனில் போரிட மறுத்த ராணுவ வீரருக்கு சிறைத்தண்டனை

உக்ரைனின் போரிட மறுத்த இளம் வீரர் ஒருவருக்கு நீதிமன்றம் 5 ஆண்டுகள் தண்டனை விதித்துள்ளது.

ரஷியா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து தாக்குதல்  நடத்தி வருகிறது.

இந்த  நிலையில், 11 மாதங்களாக இரு நாடுகள் தொடர்ந்து போரிட்டு வரும் நிலையில், இரு தரப்பில் இருந்தும் இதுவரை ஆயிரக்கணக்கான வீரர்கள் மற்றும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில்,  சிறிய நாடான உக்ரைனுக்கு  அமெரிக்க உள்ளிட்ட நாடுகள்   நிதி உதவியும், ஆயுத உதவியும் செய்து வருகின்றனர்.

ரஷியாவில் புதிதாக 3 லட்சம் வீரர்கள் ராணுவத்தில் சேர அழைப்புவிடுக்கப்பட்டுள்ள நிலையில் பலர் உயிருக்குப் பயந்து அந்த  நாட்டைவிட்டு வெளியேறினர்.

உக்ரைன் நாட்டிற்குச் சென்று போரிட மறுத்த மார்ச்செல் என்ற ரஷிய வீரருக்கு 5 ஆண்டுகள் ரசிய நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

இவர் 2022 ஆம் ஆண்டு மே பணி தொடர்பாக அறிக்கையைத் தாக்கல் செய்யவில்லை என கூறப்படுகிறது.