ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 16 மே 2023 (17:50 IST)

கக்கன் மகன் சத்திய நாதன் காலமானார்.... முதல்வர் முக. ஸ்டாலின் இரங்கல்

sathya nadhan
முன்னாள் அமைச்சர் திரு. கக்கன் அவர்களின்   3 வது மகன் சத்திய நாதன்  மறைவையொட்டி முதல்வர் முக.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் தலைமையிலான அமைச்சரவையில் 1957 முதல் 1967 வரை உள்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமைச்சராகப் பதவிவகித்தவர் அமைச்சர் கக்கன். இவர்  அரசியலிலும், பொதுவாழ்க்கையிலும்  நேர்மையாக செயல்பட்டதற்காக இன்றளவும் எல்லோராலும்  போற்றப்படுகிறார்.

இவரது 3 வது மகன் சத்திய நாதன் அரசு மருத்துவராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.  சென்னையில் காலனியில் வசித்து வந்த அவர், நேற்று தன் வீட்டில் வழுக்கி விழந்து உயிரிழந்துள்ளார்.

இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

முதல்வர் முக.ஸ்டாலின் தன் டுவிட்டர் பக்கத்தில். “தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சரும், அப்பழுக்கற்ற பொதுவாழ்க்கைக்கு அடையாளமாகத் திகழ்ந்தவருமான திரு. கக்கன் அவர்களது மகன் மருத்துவர் சத்தியநாதன் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் மனவருத்தம் அடைந்தேன். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என்று தெரிவித்துள்ளார்.