புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 15 நவம்பர் 2018 (10:34 IST)

கஜா எதிரொலி: மின் இணைப்பை துண்டிக்க உத்தரவு

கஜா புயல் கரையை கடக்க உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புயல் பாதிப்பு ஏற்படும் மாவட்டங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல்  திசைமாரிய காரணத்தால் கடலூர் மற்றும் பாம்பன் பாலம் இடையே கரையைக்கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 
 
இன்று இரவு 11.30 மணிக்கு கஜா புயல் கடலூர் மற்றும் பாம்பன் பாலம் இடையே கரையை கடக்க இருக்கிறது. புயலானது மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும், சில நேரங்களில் அதிகபட்சமாக 100 கிலோ மீட்டர் வேகத்திலும், பலத்த காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்தது.
 
தற்பொழுது கஜா புயலின் வேகமானது 14 கிலோமீட்டலிருந்து 18 கிலோமீட்டராக அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் புயல் கரையை கடக்கும் நேரத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர்  தங்கமணி கூறியுள்ளார்.