வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 12 ஜனவரி 2024 (11:09 IST)

இரவோடு இரவாக சிவசக்தி விநாயகர் கோவில் இடிப்பு: முதல்வர் ஸ்டாலினுக்கு கி.வீரமணி பாராட்டு..!

புதிதாக கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே இருந்த சிவசக்தி விநாயகர் கோவில் இடிக்கப்பட்டதற்கு திராவிடர் கழக தலைவர் கி வீரமணி நன்றி தெரிவித்துள்ளார். 
 
சமீபத்தில் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்ட நிலையில் இந்த பேருந்து நிலையத்துக்கு செல்வதற்கு போதுமான வசதி இல்லை என ஒரு பக்கம் பொதுமக்கள் ஆதங்கத்தை வெளியிட்டு வருகின்றனர்  
 
இந்த நிலையில் சமீபத்தில் திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்  கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் வளாகத்தில் கோவில்  எழுப்பப்பட்டுள்ளதாக இருப்பதாகவும், இது அரசு ஆணையை மீறும் செயல் என்று என்றும் தெரிவித்திருந்தார் 
 
இந்த நிலையில்  நேற்று முன்தினம் இரவோடு இரவாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கட்டப்பட்ட சிவசக்தி விநாயகர் கோவில் இடிக்கப்பட்டது. இந்த கோவிலை இடிக்க இந்து முன்னணி எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் கோவில் தரைமட்டமாக்கப்பட்டது 
 
இதனை அடுத்து தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கைக்கு திராவிட கழக தலைவர் கி வீரமணி நன்றி தெரிவித்துள்ளா 
 
Edited by Mahendran