திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 29 நவம்பர் 2021 (15:47 IST)

மாணவிக்கு பாலியல் தொல்லை: ஜோதி முருகனுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதாகியுள்ள கல்லூரி தாளாளர் ஜோதி முருகனுக்கு டிசம்பர் 10 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில் கடந்த 23 ஆம் தேதி திண்டுக்கல் நர்சிங் கல்லூரி தாளாளர் ஜோதி முருகன் போலீஸில் சரணடைந்தார்.

இந்நிலையில் கைதான ஜோதிமுருகனுக்கு 3 நாள் போலீஸ் காவல் அளிக்கப்பட்டது.

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதாகியுள்ள கல்லூரி தாளாளர் ஜோதி முருகனுக்கு டிசம்பர் 10 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது..

நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக திண்டுக்கல் மாவட்டம் முத்தனம்பட்டி அருகேயுள்ள சுரபி கல்லூரிக்கு  சமீபத்தில் தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.