வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 22 நவம்பர் 2022 (23:49 IST)

வெறும் 1 லிட்டர் மண்ணெண்ணை மட்டும் தானா ? கொந்தளித்த மக்கள் திடீர் சாலைமறியல்!

karur
திராவிட ரோல் மாடல் ஆட்சியில்  வெறும் 1 லிட்டர் மண்ணெண்ணை மட்டும் தானா ? கொந்தளித்த மக்கள் திடீர் சாலைமறியலால் பேருந்து நிலையம் அருகே பரபரப்பு – கரூர் அருகே பெரும் பரபரப்பு.
 
கரூர் அருகே பள்ளப்பட்டி இஸ்லாமியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி 100 நபர்களுக்கு மட்டுமே மண்ணெண்ணை அதிரடியில் கூட்டுறவு – கூட்டுறவு நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினை கண்டித்து பள்ளப்பட்டி அதிமுக வினர் பொதுமக்களுடன் சாலைமறியல்
 
கரூர் அடுத்துள்ள அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி பேருந்து நிலையத்தின் அருகே மண்ணெண்ணை பங்க் செயல்படும் நிலையில், கூட்டுறவு மூலம் இயங்கும் இந்த மண்ணெண்ணை பங்கில் பொதுமக்களுக்கு குடும்ப அட்டை வைத்திருக்கும் நபர்களுக்கு மாதம் ஒருமுறை 3 லிட்டர் என்று வழங்கப்பட்டு வரும் நிலையில், திடீரென்று ஒரு லிட்டர் தான் வழங்கப்படும், வழங்கவும் முடியும் என்றும் கராராக பேசியுள்ளார். இந்நிலையில்., பாதிக்கப்பட்ட இஸ்லாமிய சமூக மக்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய பள்ளப்பட்டி அதிமுக நிர்வாகிகள் இப்ராஹிம், ரியாஜ் அலி ஆகியோர் மற்றும் பொதுமக்களும் இணைந்து காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றியநிலையில், நீதி வேண்டி சாலைமறியலும் நடத்தப்பட்டது. இந்த சாலைமறியலால் பள்ளப்பட்டி பேருந்து நிலையத்திலிருந்து வெளிவரும் அனைத்து பேருந்துகளும் இந்த சாலைமறியலால் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் சமரசம் பேசி மேலும், ஒரு லிட்டர் சேர்த்து அதாவது 2 லிட்டர் வழங்கப்படும் என்று பேச்சுவார்த்தை முடிக்கப்பட்டது.