திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 22 நவம்பர் 2022 (22:21 IST)

கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி!

ராஜஸ்தான் மாநிலத்தில் கள்ளக்காதலனுடன் நெருக்கமாக இருந்ததைப் பார்த்த கணவனை மனைவி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மா நிலம் பரத்பூர் மாவட்டம் சிக்சனா என்ற பகுதியில் வசித்து வந்தவர் பவன். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு,  ரீமா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் வசிக்கும் வீட்டிற்கு அருகில் வசித்து வந்த பகேந்திரா என்ற இளைஞருடன் ரீமாவுக்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டதாகக்கூறப்படுகிறது.

இந்த  நிலையில், ரீமா,  கடந்த மே மாதம் பகேந்திராவை தன் வீட்டிற்கு அழைத்திருந்தார். இருவரும் வீட்டில் உல்லாசமாக இருக்கும்போது, பவன் அவர்கள் இருவரையும் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். பின், ரீமாவைத் தாக்கும்போது, பகேந்திராவும் ரிமாவும் இணைந்து பவனை கொன்றனர்.

இதையடுத்து, பவனின் சடலத்தை அருகில் உள்ள கால்வாயில் பிளாஸ்டிக்கில் சுற்றி கல்லைக் கட்டிப் போட்டுள்ளனர். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வந்த நிலையில் ரீமாவையும், பகேந்திராவையும் கைது செய்துள்ளனர்.

Edited by Sinoj