கண்ணை முடி சும்மா இருக்க முடியாது: 2 அமைச்சர்களின் வழக்கு குறித்து நீதிபதி ஆவேச கருத்து..!
அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகிய இருவரது வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்துள்ளதை அடுத்து இந்த வழக்கு தற்போது விசாரணை நடைபெற்றது.
இந்த வழக்கின் விசாரணையின் போது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.. அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை செப்டம்பர் 25ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த வழக்கு குறித்து அவர் மேலும் கூறிய போது இந்த வழக்கின் தீர்ப்பை படித்து நான் மூன்று நாட்களாக தூங்கவில்லை, இரண்டு அமைச்சர்களும் விடுவிக்கப்பட்ட நிலையில் சென்னை நீதிமன்றத்தின் மனசாட்சியை உலுக்கியதால் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
நீதிமன்றம் கட்சிக்கு, அரசுக்கு உரித்தானது அல்ல, குப்பனுக்கும் சுப்பனுக்கும் உரித்தானது. அமைச்சர்கள் இருவரையும் விடுவித்து உத்தரவுகளும் ஒரே மாதிரியாக உள்ளன.
லஞ்ச ஒழிப்புத்துறை 2021 ஆம் ஆண்டுக்கு பிறகு நிலைப்பாட்டில் இருந்து மாறியதை காண முடிகிறது. இதன் பிறகும் நான் கண்ணை மூடிக்கொண்டு இருந்தால் கடமையை செய்ய தவறியன் ஆகிவிடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Edited by Siva