வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 29 செப்டம்பர் 2023 (18:11 IST)

உரிய இழப்பீடு வழங்காமல் நிலம் கையகப்படுத்திய விவகாரம்: கலெக்டர்கள் ஆஜராக உத்தரவு

விவசாய நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரிய வழக்கில்  கலெக்டர்கள் ஆஜராக நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
தஞ்சாவூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை, பாலம் கட்ட கையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீடு வழங்க கோரிய வழக்கு தொடரப்பட்டது.
 
இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் உரிய இழப்பீடு வழங்காமல் நிலத்தை கையகப்படுத்தியது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
 
மேலும் நிலம் வழங்கிய விவசாயிகள் இழப்பீடு பெறுவது ஜனநாயக உரிமை என்று தெரிவித்த நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணை அக்டோபர் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்ததோடு, அன்றைய தினம் கலெக்டர்கள் ஆஜராக உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
 
Edited by Siva