வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 20 செப்டம்பர் 2023 (17:31 IST)

அமைச்சர்களுக்கு எதிரான வழக்கில் இருந்து விலக மாட்டேன்: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் திட்டவட்டம்..!

அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மற்றும்  தங்கம் தென்னரசு ஆகியோர்களது வழக்கில் இருந்து விலகப் போவதில்லை என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 
 
2006- 2011 ஆம் ஆண்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆக இந்த கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகிய இருவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 
 
 இந்த வழக்கில் இருந்து இருவரும் விடுவிக்கப்பட்ட நிலையில் தானாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை ஏற்று நடத்தி வருகிறது. இந்த நிலையில் நீதிபதி ஆனந்த் இந்த வழக்குகள் குறித்து கூறிய போது இந்த இரண்டு வழக்குகளை விசாரிப்பதிலிருந்து விலக மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். 
 
வேண்டுமென்றால் இந்த வழக்குகள் குறித்து உச்சநீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார் 
 
Edited by Mahendran