திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 4 செப்டம்பர் 2023 (07:40 IST)

ஆந்திராவில் போய் சனாதன ஒழிப்பு மாநாடு நடத்தி பாருங்கள் பார்ப்போம்.. சவால் விட்ட அரசியல் விமர்சகர்..!

சமீபத்தில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி கலந்து கொண்டு பேசியது சர்ச்சைக்கு உள்ளாகிய நிலையில், தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசிய அரசியல் விமர்சகர் ஸ்ரீ ராம் ’தமிழ்நாட்டில் சனாதன ஒழிப்பு மாநாடு நடத்திய உதயநிதி 100 கிலோமீட்டர் தள்ளி உள்ள ஆந்திராவில் நடத்தி பாருங்கள் பார்ப்போம் என்று சவால் விடுத்துள்ளார். 
 
சனாதனம் என்றால் நிலையற்றது என்றும் மாறாதது என்றும் சனாதனம் என்பது இந்துமத மக்களின் நம்பிக்கை என்றும் கூறிய அவர் ஜாதி ஒழிப்பிற்காக சனாதனத்தை ஒழிப்போம் என்று கூறுவது அர்த்தமற்ற செயல் என்றும் ஜாதியை வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் ஜாதியை ஒழிப்பதில் எப்படி உடன்படுவார்கள் என்றும் கூறினார். 
 
இந்து மதத்தை மட்டுமே குறிவைத்து  திமுக செயல்படுகிறது என்றும் இஸ்லாம் மதத்திலோ கிறிஸ்துவ மதத்திலோ சாதி வேறுபாடு இல்லையா என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.  அவருடைய இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva