திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 3 செப்டம்பர் 2023 (16:55 IST)

I.N.D.I.A கூட்டணி கட்சிகள் சனாதன தர்மத்தை அவமதித்து வருகிறார்கள்: அமித்ஷா

Amitshah
"I.N.D.I.A கூட்டணி கட்சிகள் இந்த நாட்டின் கலாச்சாரத்தையும், இந்துத்துவத்தையும், சனாதன தர்மத்தையும் அவமதித்து வருகிறார்கள் என  ராஜஸ்தானில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.
 
I.N.D.I.A கூட்டணியின் 2 பிரதான கட்சிகளான காங்கிரஸும், திமுகவும்  சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள் என்று கூறிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தங்களது திருப்திக்காகவும், வாக்கு வங்கி அரசியலுக்காகவும்,  I.N.D.I.A கூட்டணி கட்சிகள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்றும் கண்டனம் தெரிவித்தார்.
 
மேலும் காந்தி குடும்பத்தால் மட்டுமே நாட்டை ஆள முடியும் என்ற அகங்காரமும், கர்வமும் காங்கிரஸுக்கு இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.  மேலும் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான அரங்கில் தான் இந்து மதத்தை அவமதித்து அமைச்சர் உதயநிதி பேசியுள்ளார் என்றும் உதயநிதியின் வெறுப்பு பேச்சுடன் காங்கிரஸ் உடன்படுகிறதா என்பதை அக்கட்சி தெளிவுபடுத்த வேண்டும் என்றும் மதத்தை விமர்சனம் செய்ததற்காக அமைச்சர் உதயநிதி இது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva