வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 20 டிசம்பர் 2022 (18:38 IST)

பரந்தூரில் விமான நிலையம் அமைத்தால் பெரும் வெள்ள பாதிப்புகள் ஏற்படும்: விவசாயிகள்

parandhur
பரந்தூர் விமான நிலையம் அமைத்தால் அந்த பகுதியில் பெரும் வெள்ள பாதிப்பு ஏற்படும் என விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 
 
சென்னையில் உள்ள பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள் திட்டமிட்டுள்ள நிலையில் அந்தப் பகுதி மக்கள் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் விவசாய பிரதிநிதிகள் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான சூழல் இல்லை என்றும் விமான நிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தில் உள்ள நீரோடைகளை மறித்தால் பெரும் வெள்ள பாதிப்புகள் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளனர் 
 
மேலும் விமான நிலையத்திற்கு தேர்வு செய்யப்பட்ட இடம் முற்றிலும் விளைநிலங்கள் என்றும் அங்கு விமான நிலையம் அமைக்கக் கூடாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர் 
 
இன்று அமைச்சர்களுடன் ஆலோசனைக்கு பின்னர் விவசாய பிரதிநிதிகள் இவ்வாறு பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran