திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 19 டிசம்பர் 2021 (12:02 IST)

ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை: 10 பேரை பிடித்து போலீசார் விசாரணை!

வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை தொடர்பாக 10 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

 
வேலூர் தோட்டப்பாளையத்தில் உள்ள பிரபல நகைக்கடை ஜோஸ் ஆலுக்காஸில் இரவு 10 மணிக்கு கடையை பூட்டிவிட்டு ஊழியர்கள் சென்ற பிறகு இரண்டு காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அப்போது ஒரு கும்பல் நகைக்கடையின் பின்புற சுவற்றில் துளையிட்டு முதல் தளத்தில் நுழைந்து அங்கிருந்த நகைகளை  கொள்ளையடித்து சென்றுள்ளனர். 
 
திருடப்பட்ட நகைகள், அதன் மதிப்பு குறித்த விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இதையடுத்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற வேலூர் மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணன் மற்றும் டிஐஜி ஆகியோர் சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை தொடர்பாக 10 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். குச்சிபாளையத்தைச் சேர்ந்த டீக்காராமன் என்வரை கைது செய்து ஏற்கனவே போலீசார் விசாரித்து வரும் நிலையில் தற்போது டீக்காராமன் கூட்டாளிகளான கண்ணன், பிரபு, வசந்த் உட்பட 10 பேரை பிடித்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.